நெஞ்சு சளி இருக்கா? அப்ப இத செய்யுங்க..!

4.1/5 - (7 votes)

Nenju Sali sariyaga: சாதாரண இருமலுடன் சளி வந்தால், பிரச்சனை விரைவில் சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் எளிதில் தென்படுவதில்லை. மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிக இருமல் ஏற்படும் போது தான் சளி இருப்பது தெரியவரும். மழைக்காலம், குளிர் காலம் என எல்லா காலங்களிலும் சளி, இருமல் பிரச்சனை வரலாம். எனவே சாதாரண சளி இருமல் பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. நெஞ்சு சளி மற்றும் இருமல் பிரச்சனையை குணப்படுத்த ஒரு சில வீட்டு வைத்தியங்கள் போதும்.

வைத்தியம்: 1

சிறிது தேங்காய் எண்ணெயை எடுத்து சூடாக்கவும். பிறகு சிறிது கற்பூரத்தை எண்ணெயில் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் மார்பில் நன்றாக தேய்க்கவும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யலாம். இந்த முறையை இரண்டு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நெஞ்சு சளி குணமாகும்.

நெஞ்சு சளி
நெஞ்சு சளி

வைத்தியம்: 2

மிளகு அனைவரின் வீட்டிலும் இருக்கும். இந்த மிளகை நசுக்கி பொடி செய்து கொள்ளவும். பிறகு ஒரு டம்ளர் பாலில் சிறிது நசுக்கிய மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் குடிக்கவும். இரண்டு நாட்கள் குடித்தால் போதும். நெஞ்சு சளி ஆரம்ப நிலை குணமாகும். ஆனால் நாள்பட்ட நெஞ்சு சளி உள்ளவர்களுக்கு இந்த முறை அமைவதில்லை.

வைத்தியம்: 3

நெஞ்சு சளி பிரச்சனைக்கு இது சிறந்த கை மருந்து. குறிப்பாக இந்த முறையை பின்பற்றுவதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. என்ன டிப்ஸ் என்று யோசிக்கிறீர்கள். அதாவது ஒரு மண் விளக்கை எடுத்து அதில் நெய் ஊற்றி வாழைத்தண்டினால் விளக்கேற்ற வேண்டும். பின் வெற்றிலை எண்ணையை தடவி விளக்கில் காட்டவும். பின்னர் நீங்கள் வெப்பத்தை பொறுத்து மார்பில் ஒரு கட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் சளி இருமல் பிரச்சனை விரைவில் குணமாகும்.

Leave a Comment