ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி யாருக்கு தெரியுமா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39.5 சதவீத வாக்குகளும், அதிமுக 24.5 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 9.5 சதவீத வாக்குகளும், திமுக 2 சதவீத வாக்குகளும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முதல்முறை வாக்காளர்கள் உட்பட 21 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களிடையே நாம் தமிழர் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி நாம் தமிழர் கட்சிக்கு 29.5 சதவீதமும், காங்கிரஸ் கட்சிக்கு 28.5 சதவீதமும், அதிமுக 17 சதவீதமும், திமுக 3 சதவீதமும் பெற்றுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி கருத்துக்கணிப்பு முடிவு
மேலும் கல்வி, தொழில், ஜாதி, மதம், பாலினம் போன்றவற்றில் காங்கிரஸ் வேட்பாளர் முதலிடத்திலும், அ.தி.மு.க., நாம் தமிழர் வேட்பாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.