TNPSC குரூப் 4 தேர்வு எழுதப் போறீங்களா? அப்போ இதை செய்ங்க..!

4.1/5 - (16 votes)

TNPSC Group 4 Important News: தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளுக்கு சமீபத்தில் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்ப குரூப் 4 அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான அனுமதி அட்டையினை ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் விண்ணப்பதாரர் தேர்வு மையம் மற்றும் தேர்வு தேதியினை தெரிந்து கொண்டனர். 

மேலும் TNPSC குரூப் 4 தேர்வு நாளை அதாவது ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வினை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் மொத்தம் 7689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 Important News
TNPSC Group 4 Important News

தேர்வர்கள் கவனத்திற்கு..! TNPSC Group 4 Important News

  • TNPSC குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும்,தேர்வர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்வர்கள் தங்களது அனுமதி சீட்டினை (Hall Ticket) கலர் அல்லது black and white நகலை எடுத்து வரலாம்.
  • அனுமதி சீட்டு தெளிவாக print எடுத்து வர வேண்டும்.
  • தேர்வர்கள் தங்களது பாஸ்போர்ட், ஆதார் கார்டு,ஓட்டுநர் உரிமம்,பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகையவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் நகல் எடுத்து வர வேண்டும்.
  • நீங்கள் தேர்வில் விடைகளை OMR தாளில் கருப்பு நிற பால்பாயின்ட் (Ball Point) பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு:

  1. TNPSC குரூப் 4 தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கொண்ட வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். அதில் கட்டாய தமிழ் மொழி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும்.
  2. பொது படிப்பு பிரிவில் 75 கேள்விகள் , திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள், 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும்.
  3. தேர்வில் குறைந்தது 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவார்கள்.
  4. அதுமட்டுமில்லாமல், பொதுத்தமிழில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே அடுத்த பிரிவில் உள்ள விடைகளை மதிப்பீடு செய்யப்படும்.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்:

TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும். அக்டோபரில் சான்றிதழ் பதிவேற்றமும், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.

Leave a Comment