TNPSC Group 4 Important News: தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளுக்கு சமீபத்தில் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7382 பணியிடங்களை நிரப்ப குரூப் 4 அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான அனுமதி அட்டையினை ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டது. அதில் விண்ணப்பதாரர் தேர்வு மையம் மற்றும் தேர்வு தேதியினை தெரிந்து கொண்டனர்.
மேலும் TNPSC குரூப் 4 தேர்வு நாளை அதாவது ஜூலை 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. TNPSC குரூப் 4 தேர்வினை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக தமிழகத்தில் மொத்தம் 7689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் கவனத்திற்கு..! TNPSC Group 4 Important News
- TNPSC குரூப் 4 தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறும்,தேர்வர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
- தேர்வர்கள் தங்களது அனுமதி சீட்டினை (Hall Ticket) கலர் அல்லது black and white நகலை எடுத்து வரலாம்.
- அனுமதி சீட்டு தெளிவாக print எடுத்து வர வேண்டும்.
- தேர்வர்கள் தங்களது பாஸ்போர்ட், ஆதார் கார்டு,ஓட்டுநர் உரிமம்,பான் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகையவற்றில் ஏதேனும் ஒன்றை அவசியம் நகல் எடுத்து வர வேண்டும்.
- நீங்கள் தேர்வில் விடைகளை OMR தாளில் கருப்பு நிற பால்பாயின்ட் (Ball Point) பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
முக்கிய குறிப்பு:
- TNPSC குரூப் 4 தேர்வானது மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கொண்ட வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். அதில் கட்டாய தமிழ் மொழி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும்.
- பொது படிப்பு பிரிவில் 75 கேள்விகள் , திறனறிதல் பிரிவில் 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள், 150 மதிப்பெண்களுக்கு இடம் பெறும்.
- தேர்வில் குறைந்தது 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவார்கள்.
- அதுமட்டுமில்லாமல், பொதுத்தமிழில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களை எடுத்தால் மட்டுமே அடுத்த பிரிவில் உள்ள விடைகளை மதிப்பீடு செய்யப்படும்.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்:
TNPSC குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும். அக்டோபரில் சான்றிதழ் பதிவேற்றமும், நவம்பரில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.